20 வருடம் கழித்து 'கில்லி' படத்தை ஓகோன்னு கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!

Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

Ghilli Re Release

Ghilli ReRelease:நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. இந்த படம்  கோலிவுட்டின் முதல் 50 கோடி வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளர். வில்லனாக பிரகாஷ் ராஜ் கலக்கி இருப்பார். இது தான் படத்திற்கான ஹிட் என்றே சொல்லலாம். இவ்வாறு  நடிகர் விஜய் கேரியரில் முக்கியமான படமான ‘கில்லி’ 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 600 திரையரங்குகளில் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முதல் காட்சியை காணக் குவிந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ‘கில்லி’ ரீ-ரிலிஸை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது வழக்கமான மறுவெளியீடு இல்லாமல், தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்து சாதனை படைத்துள்ளனர். ஆம்…இப்படம் தமிழகம் மட்டுமல்லாமல், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில், புதுப் படம் வெளியானது போல் கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown nodeunknown node
20 வருடம் கழித்து 'கில்லி' படத்தை ஓகோன்னு கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!