"தளபதி 65". படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது இவர்தானா .?

Rashmika Mandana will be paired with Vijay in the upcoming film directed by Nelson Dileepkumar starring Thalapathy Vijay.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.இவர் அடுத்ததாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள “தளபதி 65” படத்தில் நடிக்கவுள்ளார் .

அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது .அந்த வகையில் தளபதி-65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானாவை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .அவர் ஒப்பு கொண்டால் தளபதி விஜய்யுடன் ரஷ்மிகா நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.