தளபதி 65 படத்தில் அசுரன் தனுஷ்..?? வெளியான மாஸ் தகவல்..!!

It has been reported that actor Dhanush will play the lead role in thalapathy 65.

தளபதி 65 படத்தில் நடிகர் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான கடந்த சில நாட்களிற்கு முன்பு நடைபெற்றது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த தளபதி 65 படத்தில் நடிகர் தனுஷ் முக்கியனமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் இந்த படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.