தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று யுவன் ஷங்கர் ராஜா ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியானதை ஒழிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வலிமை படத்தை பான் – இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் வலிமை பட இயக்குநரான எச். வினோத் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட் எதாவது வாங்கி தாங்க என்று கேட்க யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் அது விரைவில் வெளிவரும் என்று பதிலளித்துள்ளார்.
unknown nodeunknown nodeunknown node