100 கோடிக்கு மேல் வசூல் செய்த தல அஜித் திரைப்படங்கள்..!

List of films starring Ajith that have grossed over Rs 100 crore.

அஜித் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியல்.

தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தாலே திருவிழாக போலத்தான் இருக்கும். மேலும் நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்களை குறித்து பார்ப்போம். இதில் முதலிடத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானமங்காத்தாபடம் தான் அஜித்தின் முதல் 100 கோடி படம், உலகம் முழுவது இந்த படம் 140 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்.

இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டு வெளியானஆரம்பம்திரைப்படம் 124 கோடி வசூல் செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியானவீரம்படம் 130 கோடி வசூல் செய்துள்ளது. நான்காவது இடத்தில கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானஎன்னை அறிந்தால்படம் 115 கோடி வசூல் செய்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் அதே 2015 ஆண்டு வெளியானவேதாளம்திரைப்படம் 150 கோடி வசூல் செய்துள்ளது. ஆறாவது இடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியானவிவேகம்திரைப்படம் 130 கோடி வசூல் செய்துள்ளது. ஏழாவது இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானவிஸ்வாசம்திரைப்படம் அஜித்திற்கு மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றே கூறலாம், ஆம் உலகளவில் 200 கோடி வசூலை கடந்து அஜித்திற்கு முதன் முதலாக 200 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையும் படைத்தது. அடுத்ததாக எட்டாவது இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானநேர்கொண்ட பார்வைபடம் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும்வலிமைபடம் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.