தல 60 படத்தில் இருந்து விலகிய இயக்குனர் வினோத்….!!!
- தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் தல அஜித்.
- எச். வினோத் தல 59 படத்திற்கு பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் தல அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அஜித் நடித்து வெளியான விசுவாசம் படம் பல கோடிகளை வசூல் செய்தது.
இந்நிலையில், நடிகர் அஜித் பிங்க் படத்தின் ரீமேக்கை தொடர்ந்து உருவாக உள்ள தல 60 படத்தையும் இயக்குனர் வினோத் தான் இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து, எச். வினோத் தல 59 படத்திற்கு பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். தல 60 படத்தை மீண்டும் சிவாவே இயக்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.