ஹைதராபாத் :பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும் மகள் உள்ளனர். நேற்றிரவு (அக்டோபர் 4) காயத்ரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த மகள் காயத்ரி, வீட்டிற்கு சொல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டதால், ராஜேந்திர பிரசாத் பேசமால் இருந்துவந்துள்ளார். அதன் பின்னர் மனம் மாறி, சமீபத்தில்தான் காயத்ரியை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தற்பொழுது, காயத்ரியின் அகால மரணத்திற்கு நானி, ஜூனியர் என்டிஆர் போன்ற பிரபலங்கள் உட்பட தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும்,தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திர பிரசாத்தின் வீட்டிற்கு நேரில் சென்று சஞ்சலி செலுத்தினர்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node