தங்கலான் :தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் படமும் ஒன்று என்றே கூறலாம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோஹனன், பார்வதி திருவொத்து, பசுபதி, முத்து குமார், ப்ரீதி கரண், தங்களால் அர்ஜுன் அன்புடன்,ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் 150 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, படத்தில் இருந்து டிரைலர் மற்றும் படத்தின் முதல் பாடல் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
இதனையடுத்து, படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
கர்நாடகாவின் கோலார் தங்க வயல்களில் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே எல்லா மொழிகளிலும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
unknown node