தியேட்டரில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தும் -அமைச்சர் கடம்பூர் ராஜு.!

Minister KadambRaju said that if the producers decide to release the master film on OTT, we talks with the producers to release in theaters.

மாஸ்டர் படத்தினை தயாரிப்பாளர்கள் ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தால் ,அதனை திரையரங்குகளில் வெளியிட கோரி தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்தது .இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தினை தயாரிப்பாளர்கள் ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டால் , திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை வெளியிட கோரி தமிழக அரசு மாஸ்டர் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வானகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, மாஸ்டர் படத்தினை திரையரங்குகளில் வெளியிட வலியுறுத்தி அரசு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியதுடன் ஜெயலலிதா திட்டமிட்டப்படி சினிமாத் துறையினருக்கான விருது வழங்கும் விழாவை எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி அன்று பிரமாண்ட விருது விழாவாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார் .