தமிழ் திரையுலகினருக்கு என்னை பற்றி எதுவும் தெரியல நடிகை ஆண்ரியா உருக்கம்

This news gives information about Tamil filmmakers have no idea about me and actress is jealous-tamil thiraiyulakinarukku ennai parri ethuvum theriyala

நடிகை ஆண்டிரியா தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் பிரபலமான நடிகை.

நடிகை ஆண்டிரியா தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக “மாளிகை” எனும் படத்தில் நாயகியாக இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி உள்ளார்.

சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ளார்.இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ளார்.இந்த படம்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக விளங்குவதால் இந்த படத்தை  எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கடந்த ஏப்ரல் 9 தேதி நடைபெற்றது.அதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அப்போது நடிகை ஆண்ட்ரியா அந்த விழாவில் பேசினார்.

முதலில் மாளிகை படம் கன்னட மொழியில் தான்  பண்ண வேண்டியதாக இருந்தது. தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட்  இருக்கு என்று கூறி இந்த படத்தை தமிழில் எடுத்து விட்டார்.  இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குநர் ஆகியோருக்கும்  எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது  என்பதை தெரிந்து வைத்துள்ளது எனக்கு  மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் தமிழ்திரையுலகில் இருப்பவர்களுக்கு என்னை பற்றி எதுவும் தோன்றவில்லை என்று கூறியுள்ளார். இந்த படத்தின்  கதை ரசிகர்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும்” என்றும் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகினருக்கு என்னை பற்றி எதுவும் தெரியல நடிகை ஆண்ரியா உருக்கம்