கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரே திரையில் நேருக்கு நேர் நாகார்ஜூனா மற்றும் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும், தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்களும் சந்தித்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது . தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் ஆரம்பித்த நிலையில் அதனை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார் . அதே நேரத்தில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் .இந்த நிலையில் நேற்றைய தினம் கமல்ஹாசன் அவர்களின் 66-வது பிறந்தநாள் என்பதால் பல அதிர்ச்சிகளை கமலுக்கு பிக்பாஸ் வழங்கியிருந்தார் .
ஆம் அவரது குடும்பத்தினர் முதல் கொண்டு அவரது இரு பெண் குழந்தைகளும் திரையில் தோன்றி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள் . அதில் சிறப்பு என்னவென்றால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் நாகார்ஜூனா அவர்கள் ஆன்லைன் மூலம் திரையில் தோன்றி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் .இது கமல்ஹாசன் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் மகிழ்ச்சியையும் , நன்றியையும் கூறியிருந்தார் .ஒரே திரையில் கமல்ஹாசன், நாகார்ஜூனா மற்றும் தமிழ், தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களை கண்ட ரசிகர்களுக்கு கண் கொள்ளா காட்சியாகவே இருந்தது .
unknown node