முதல் முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போடும் டாப்ஸி.!

It has been reported that actress Taapsee will next be paired with Bollywood superstar Shah Rukh Khan.

நடிகை டாப்ஸி அடுத்ததாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி . அதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 ,கேம் ஓவர் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை டாப்ஸி அனுராக் காஷ்யப்பின் டூ பாரா , லூப் லாபெட்டா , இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமான ‘சபாஷ் மித்து’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக நடிகை டாப்ஸி பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதல் முறையாக ஜோடி சேரும் ஷாருக்கான் மற்றும் டாப்ஸியின் இந்த படத்தினை பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த திரைப்படம் பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு செல்லும் புலம் பெயர்ந்தவரின் கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போடும் டாப்ஸி.!