சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் :தலைமறைவான காதலி ரியா சக்கரபர்த்தி.!

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக காதலி ரியா சக்கரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை வழக்கு பதிவு செய்ததை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக காதலி ரியா சக்கரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை வழக்கு பதிவு செய்ததை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தை குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் சுஷாந்த் சிங்கின் தந்தை, மகனை மரணத்திற்கு தூண்டியது சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபர்த்தி என்று கூறி பீகாரில் உள்ள பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் ரியா சக்கரபர்த்தியின் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு FIR பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து ரியாவை கைது செய்ய மும்பைக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் ரியா அவரது வீட்டில் இல்லை என்றும், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.