ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சூர்யாவிற்கு, நடிகர் விஜய்சேதுபதியின் ட்வீட்.
நடிகை ஜோதிகா கோயில்களை போலவே, பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என கூறியிருந்தார். இவரது இந்த கருத்திற்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.
இந்நிலையில், ஜோதிகாவின் கணவரும், பிரபல நடிகருமான சூர்யா, ஜோதிகாவின் இந்த கருத்தில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து அவர் இணைய பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
unknown nodeஇதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சிறப்பு என ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே, ஜோதிகாவின் கருத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியானது. இதனை மறுத்த விஜய் சேதுபதி, தற்போது அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.