நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் ஞானவேல் ராஜ் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்தவுடன் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் வாடிவாசல் கெட்டப் இது தான் இன்று கூறிவருகிறார்கள்.
unknown nodeவாடிவாசல் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வரும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.