பேக் டூ பேக் மாஸ் காம்போ! சர்ப்ரைஸ் காட்டும் சூர்யா & ஸ்டூடியோ கிரீன்!

Default Image

நடிகர் சூர்யா நாடிப்பில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது. அதனை அடுத்து சூர்யாவின் எந்த படமும் வெளியாகமல் இருந்தது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படம் வெகுநாட்கள் தள்ளிபோய் தற்போது மே 31இல் வெளியாக உள்ளது. அடுத்து சுதா கொங்கார இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் தயாரிக்க உள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படமும், கௌதம் கார்த்திக்கின் தேவராட்டம் திரைப்படமும் வெளியாக உள்ளது. இதனை அடுத்து சிம்பு – கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தையும் தயாரிக்க உள்ளார்.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்