கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் “வணங்கான் “திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
unknown nodeVanangaan [Image Source: Twitter ]
அதனை தொடர்ந்து படத்திற்கான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் வேலைகள் நடிக்கிறதா என்பது குறித்த தகவலும் கூட வெளியாகவில்லை. இதனால் இணையத்தில் சூர்யாவுக்கு – பாலாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவியது.
unknown nodeVanaangan [Image Source: Twitter ]
அதுமட்டுமின்றி, வணங்கான் திரைப்படம் சில காரணங்களால் டிராப் ஆகிவிட்டது என்றும் வதந்தி தகவல் பரவியது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘வணங்கான்’ திரைப்படம் குறித்த குட்டி அப்டேட்டை இயக்குநர் பாலா கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-கவலைக்கிடமான ‘துணிவு’ மொத்த ரேட் 15 கோடிதான்… அஜித்திற்கு வந்த சோதனை.?
unknown nodeDirector Bala [Image Source: Twitter ]
அதில் “வணங்கான்” படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக பரவிய தகவல் குறித்து கேள்வி கேட்க, உடனே அதற்கு மழுப்பலாக பதிலளித்து அங்கிருந்து நகர்ந்தார்.