சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு! யாரெல்லம் இருக்காங்க தெரியுமா?

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வெற்றி கூட்டணியான இயக்குனர் சுதா கொங்கராவும் நடிகர் சூர்யாவும் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 43வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100 வது திரைப்படமாகும்.
மேலும், இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை அறிவிப்பதற்காக ப்ரோமோ வீடியோ போல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. ஆனால், அதன் படத்தின் முழுப்பெயரை வெளியிடாமல் வீடியோவை முடித்து சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளது.
எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த அசத்தல் ‘கிஃப்ட்’? இன்னும் வைத்திருக்கும் நடிகர் சத்யராஜ்!
நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காம இருந்து வந்த நடிகை நஸ்ரியா இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் சூரிய மற்றும் துல்கர் சல்மான் நண்பனாக நடிக்க பாலிவுட் ஹீரோ விஜய் வர்மா வில்லனாக நடிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பாக்கியராஜ் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த ‘கிஃப்ட்’! நெகிழ்ந்து போன பூர்ணிமா!
மேலும் தற்போதைய வதந்திகளின்படி, இப்படம் 1990க்கு முன்னாடி தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை முன்வைத்து இப்படத்தின் கதை உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025
INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!
February 24, 2025
தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறப்பு… விலை எவ்வளவு தெரியுமா?
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…
February 24, 2025