10 மொழிகளில் வெளியாகும் "சூர்யா 42".! மிரட்டலான மோஷன் போஸ்டர் இதோ...

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இந்தப் படத்தைத் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இந்தப் படத்தைத் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

unknown node

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் கோவாவில் தொடங்கப்படவுள்ளது.

இதையும் படியுங்களேன்-பீஸ்ட் படத்திற்கு விழுந்து அடி.! சூசகமாக காய் நகர்த்தும் வாரிசு படக்குழு.! வரிசை கட்டிய அடுத்தடுத்த அப்டேட்ஸ்…

unknown node

இதற்கிடையில், படத்தின் மோஷன் போஸ்டர் நாளை  காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், தற்போது மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

unknown node

போஸ்டர்லில் ஒரு கழுகு ஒன்று சூர்யாவின் மேல் நிற்பது போன்றும் மிரட்டலான தேவி ஶ்ரீபிரசாத்தின் துல்லியனமான பின்னணி இசையும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்து.இந்த படம் 3டியில் உருவாகிறது என்றும் 10 மொழிகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யாவின் முகத்தை போஸ்டரில் காண்பிக்காததால் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கிறார்கள்.