சூர்யா 42 புகைப்படங்கள் லீக்.! ஷேர் செய்தால் வழக்கு பதியப்படும்.! தயாரிப்பாளர் எச்சரிக்கை.!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "சூர்யா 42". இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “சூர்யா 42”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

unknown node

வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் 3 டி தொழிநுட்பத்தில் உருவாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கடி சமூக வளைத்தள பக்கங்களில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன்-நானே வருவேன் படம் ரிலீஸ் ஆகுதா இல்லையா..? கலைப்புலி தாணு மீது செம கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்.!

unknown node

இதனையடுத்து, “சூர்யா 42” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உள்ள போட்டோ, வீடியோக்களை வெளியிடுபவர்கள் மற்றும் அதை பகிர்வோர்கள் மீது காப்புரிமை வழக்கு தொடரப்படும் என்று ஸ்டூடியோ க்ரீன் எச்சரிக்கை விடுத்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் சூர்யா, இயக்குநர் சிவா ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

unknown node