வலிமை படத்தில் மாஸ்டர் கார்... வெளியான சூப்பர் தகவல்..!

It has been revealed that there is a car with Vijay in the master movie in the movie Valaimai directed by H. Vinod and starring Ajith.

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் வைத்துள்ள கார் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும்,அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது சவுத் ஆப்பிரிக்காவில் நடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர் . இதனை தொடர்ந்து தற்போது இந்த வலிமை படத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் வைத்துள்ள கார் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மாஸ்டர் படத்தில் விஜய் அஜித் நடித்துள்ள காதல் கோட்டை படத்திற்கான கதையை கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.