ராணுவ வீரர்களின் நலனுக்காக அவர்கள் குடும்பத்திற்கு 175 ஏக்கர் நிலத்தை வழங்கும் சுமன்

this news gives information about Suman who owns 175 acres of land for the benefit of the soldiers-ranuva virarkalin nalanukka

நம்மில் பலர் மத்தியில் தான் சாதி மத வேறுபாடுகள்உள்ளனர்.ஐதராபாத்தில் உள்ள போக்கீர் என்ற இடத்தில் தனக்கு சொந்தமாக 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்கள் நலனுக்காக அவர்கள் குடும்பத்திற்கு வழங்க இருக்கிறேன்.

இயக்குனர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்.இவர் இயக்கத்தில் தமிழில் பல முன்னணி நடிகைகளை வைத்து கிரீடம், மதராச பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் , தலைவா ஆகிய வெற்றி படங்களை கொடுத்து உள்ளார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் “வாட்ச்மேன்”.இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகராகவும் , சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.இப்படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நடிகர் சுமன் , நமது ராணுவவீரர்கள் மத்தியில் சாதி மத பாகுபாடுகள் இல்லாமல். ஒற்றுமையாக எல்லையில் பாதுகாத்து வருகின்றனர்.

ஆனால் நம்மில் பலர் மத்தியில் தான் சாதி மத வேறுபாடுகள்உள்ளனர்.ஐதராபாத்தில் உள்ள போக்கீர் என்ற இடத்தில் தனக்கு சொந்தமாக 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்கள் நலனுக்காக அவர்கள் குடும்பத்திற்கு வழங்க இருக்கிறேன்.

இந்த நிலத்தை கொடுப்பதற்கு எனது மனைவியும் சம்மதம் தெரிவித்து விட்டார் என  நடிகர் சுமன் கூறினார்.

இயக்குனர் விஜய் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாறு திரைப்படமாக உருவாக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.