கே.ஜி.எப் குழுவுடன் கை கோர்க்கும் சுதா கொங்கரா.! மீண்டும் ஒரு ராக்கி பாய் நம்ம தமிழ் சினிமாவிலிருந்து ..?

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

unknown node

இந்த படங்களை தொடர்ந்து அடுத்தாக சுதா கொங்கரா ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார், அந்த படத்தை இந்தியன் சினிமாவே கொண்டாடி வரும் கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதால் கண்டிப்பாக பெரிய பட்ஜெட் படமாக தான் இருக்கும். அப்படி என்றால் படத்தில் டாப் ஹீரோ தான் நடிக்கவிருப்பார், முன்னதாக சுதா கொங்கரா தான் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறியிருந்தார்.

unknown node

அதனையும், இந்த அறிவிப்பையும் வைத்து பார்க்கையில், சுதா கொங்கரா அடுத்தாக சூர்யாவை வைத்து தான் படம் இயக்கவுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ளது சூர்யா தானா அல்லது வேறொரு நடிகாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

unknown node

சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .