வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.!

The story of the film starring Soori in the hit direction has been abruptly changed and its shooting is said to start from next week.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் . வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுற்றி ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு வளைகுடா நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது..

ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது தற்போதும் வெளிநாடுகளில் நடத்துவதற்கான சூழல் இல்லாத காரணத்தால் படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் சூரியின் படத்தின் படப்பிடிப்பை சத்யமங்கலம் பகுதியில் வைத்து அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை விரைவில் முடித்து விட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.