இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் -24 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரிய தர்சன் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் பக்க பலமாக நடித்தார். மேலும், படத்தில் பிரேம்ஜி அமரன், கருணாகரன், அஞ்சேனா கிருத்தி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
unknown nodeநீண்ட ஆண்டுகள் கழித்து சிம்புவிற்கு ஒரு கம் பேக் படமாக மாநாடு அமைந்தது. சாதாரண கதையை டைம் லூப் கதையாக மாற்றி ரசிகர்களுக்கு புரியும் படி, வெங்கட் பிரபு கொடுத்திருந்தார். இசையமைப்பாள யுவன் ஷங்கர் ராஜா படத்தின் பின்னணி இசையை படத்தின் பாதி பக்கபலமாக அமைந்தது. படத்தில் எடிட்டராக பிராவின் கே.எல் பணியாற்றியிருந்தார்.
unknown nodeஇந்த நிலையில் இன்றுடன் மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் ஓடி 100 நாள் என்பதால் 100-வது நாள் கொண்டாட்டத்திற்கு நடிகர் சிம்பு கோயம்பேடு ரோகிணி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். அதன்பிறகு “நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை” என நிகழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதன்பின் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeunknown node