தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தை தொடர்ந்து காக்கி சட்டை, ஈட்டி , மருது, வெள்ளைக்கார துரை, உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
unknown nodeஆனால், பெரிதாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக தமிழில் இவர் சங்கிலி புங்கிலி கதவை தோற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
unknown nodeஅதன்படி, நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக “ரெய்டு” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கார்த்தி என்பவர் இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதுகிறார்.
unknown nodeபடத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விக்ரம் பிரபு டாணாக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ரெய்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to reveal the first look of @iamVikramPrabhu‘s next #RAID.
All the very best team ????#RaidFirstLook @SDsridivya @dir_muthaiya @Directorkarth17 @OpenScreenoffl @SamCSmusic @Ananthika108 @Kathiravan7384 @kanishk_offl @vinoth_offl @guruboopathy14@DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/eOQ9R2R14G— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 16, 2022