“பேச்சு கல்யாணி ராகம்மா”…புஷ்பா -2 படத்தின் டப்பிங்கை முடித்த ‘ஸ்ரீவள்ளி’ ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா புஷ்பா-2 படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக இன்ஸ்டாவில் ஸ்டோரி வெளியிட்டு தெரிவித்தள்ளார்.
சென்னை : ‘புஷ்பா-2 தி ரூல்’ திரைப்படம் வரும் டிசம்பர்-5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. புஷ்பா படத்தின் முதற்பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருக்கிறது. அதிலும், புஷ்பா மற்றும் பான்வர் சிங் இடையேயான மோதல்கள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுவும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
புஷ்பா, பான்வர் சிங்கை போலவே புஷ்பா படத்தின் மற்றொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. அதுதான் ஸ்ரீ வள்ளி, அந்த கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அவரது ரசிகர்களை பெரும்பாலும் ஈர்த்தது. அந்த கதாபாத்திரத்தில் கிராமத்தில் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணாக அவர் சிறப்பாகவே நடித்திருப்பார்.
தற்போது, புஷ்பா-2 படத்தின் ஃபஸ்ட் ஆஃப்பிற்கு இவரது டப்பிங்கை இவர் முடித்துள்ளதாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அந்த ஸ்டோரியில், “புஷ்பா-2 திரைப்படம் படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிந்தது. புஷ்பா2 படத்தின் ஃபஸ்ட் ஆஃப்பிற்கு டப்பிங்கை முடித்து விட்டேன். தற்போது, செகண்ட் ஆஃப்பிற்கு டப்பிங் செய்து வருகிறேன்.
புஷ்பா-2 திரைப்படத்தின் இந்த ஃபஸ்ட் ஆஃப் சூப்பராக வந்துள்ளது. நான் ஒரு வரி வார்த்தைகளால் சொல்லிவிட்டேன், ஆனால், உங்களுக்கு அது வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும். என்னால் காத்திருக்க முடியவில்லை”, என ராஷ்மிகா அந்த இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.