தளபதி விஜய்க்காக சிவகார்த்திகேயன் செய்யவுள்ள ஸ்பெஷல் காரியம் .!

It has been reported that the Doctor movie starring Sivakarthikeyan is to be shown to Vijay and his family in person.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தினை விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் போட்டு காட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தனது மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா பட இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தினை நடிக்க உள்ளார் .சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 65 படத்தின் முன் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை தனிப்பட்ட முறையில் தளபதி விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போட்டு காட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இதுபோன்று சிவகார்த்திகேயனின் கனா படத்தினை விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனியாக போட்டு காட்டியது குறிப்பிடத்தக்கது.