பிறந்தநாளை பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கொண்டாடிய சோம் சேகர்.! வைரல் புகைப்படங்கள்.!

Photos of Big Boss contestants attending Big Boss Som Sekar's birthday party have gone viral on social media.

பிக்பாஸ் சோம் சேகரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் .

இந்த நிலையில் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னரும் ஒருவருக்கொருவர் சந்தித்து நட்பை பாராட்டி வருகின்றனர்.இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்கள் அனைவரும் இதுபோன்று ஒன்றாக இணைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.ஆம் பிக்பாஸ் மூலம் பிரபலமான சோம் சேகர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் .

அந்த பார்ட்டியில் ரியோ ,ஸ்ருதி ரியோ, அர்ச்சனா,ஆஜீத், ஷிவானி, சம்யுக்தா, பாலாஜி,கேபி ,ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,வேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown node
பிறந்தநாளை பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கொண்டாடிய சோம் சேகர்.! வைரல் புகைப்படங்கள்.!