இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.
unknown nodeஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
unknown nodeஇந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து. ரிலீஸ்-ஆக தயாராக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகாமல் உள்ளது. படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeஇந்நிலையில், பொம்மை திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “பொம்மை திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை சூப்பராக கொடுத்திருக்கிறார். அதுதான் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது. படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.