சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர்’. இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
மேலும், கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்திலிருந்து அண்மையில் வெளிவந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இத்திரைப்படம் மீண்டும் தொடங்குகிறது. அந்த வகையில், இன்று முதல் டப்பிங் பணிகள் பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது என்று படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
unknown node