அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் கடைசியாக பிரபு தேவா நாயகனாக நடித்து இருந்த களவாடிய பொழுதுகள் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார்.
unknown nodeஇந்நிலையில் இவர் தற்போது தனது மகன் விஜித் பச்சனை நாயகனாக வைத்து, டக்கு முக்கு டிக்கு தாளம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிலானா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை பி.எஸ்.என் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.