டாக்டர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.!

Sivakarthikeyan has said that the dubbing work of the movie 'Doctor' starring actor Sivakarthikeyan has been completed.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் டாக்டர் படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் தொடங்கிய டப்பிங் பணியானது தற்போது முடிவடைந்து விட்டதாகவும் , இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node