டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை அனு தீபக் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் உக்கிரனைச் செய்த நடிகை மரியா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeதமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காமெடி கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
இதையும் படியுங்களேன்-கோப்ரா படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..?
unknown nodeஇந்த நிலையில், தற்போது படத்திற்கான முதல் பாடலான “பிம்பிலிக்கிபிலாபி” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடலை எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளார்.
unknown nodeபாடலில் ஒரு சில காட்சிகளில் ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்து நடனமாடும் காட்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது என்றே கூறலாம். சமீப காலமாக தமன் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் அடித்துவிடுவதால் இந்த பாடலும் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கபடுகிறது.
unknown node