இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. படம் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாக இன்னும் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.
பொதுவாக ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படங்களை பார்த்துவிட்டு பாராட்டி விடுவார். அதைபோல் டான் படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு கால் செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில், டான் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். அப்போது சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியீட்டு ” இந்திய சினிமாவின் டான் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆசி பெற்றேன். அந்த 60 நிமிடங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்”. என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
unknown node