எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்திகேயன் தான்.! அடித்து கூறும் பிரபல தயாரிப்பாளர்.!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் விமர்சன

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி மேல் வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

unknown node

Prince Sk Movie [Image Source: Google]

இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதையும் படியுங்களேன்-மக்களே தயாரா..? சிரிக்க வைக்க வருகிறார் “வைகைபுயல்” .! #NaaiSekarReturns ரிலீஸ் தேதி இதோ.!

unknown node

Prince Sk Movie [Image Source: Google]

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் அன்புசெழியன் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” வழக்கம் போல சிவகார்த்திகயேன் படங்கள் வெற்றியடைவது போல இந்த படமும் வெற்றி அடைந்துவிடும்.

unknown node

G. N. Anbu Chezhiyan [Image Source: Google]

எல்லாருக்கும் தெரியும்..தமிழ் சினிமாவில் எல்லாருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள். அதில் மறைந்த எம்ஜிஆர் அவர்கள் அதற்கு பிறகு ரஜினி சார், அதற்கு பிறகு விஜய் சார், அதற்கு அடுத்த படியாக அனைவர்க்கும் பிடித்த ஹீரோவாக இருப்பது சிவகார்த்திகேயன் தான். இந்த படத்தை நாங்கள் ரிலீஸ் செய்வது சந்தோசமாக இருக்கிறது.