பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து பரிதாப பலி.!

பிரபல பாடகர் லியாம் பெய்ன் (31) அர்ஜெண்டினாவில் உள்ள ஹோட்டலின் 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

Direction member Liam Payne dies

தென் அமெரிக்கா :பிரபல ஒன் டைரக்ஷன் (ONE DIRECTION) சைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் தனிப்பாடலாளருமான லியாம் பெய்ன், பியூனஸ் அயர்ஸில் ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2010ல் ஒன் டைரக்ஷன் குழுவில் இணைந்து முன்னணி பாடகராக திகழ்ந்தார். பின் 2016ல் இசைக்குழு கலைக்கப்பட்ட பின் சோலோ பாடகராக வலம் வந்தார்.

இந்த நிலையில், 31 வயதான பிரிட்டிஷ் பாடகரான லியாம், பலேர்மோ மாவட்டத்தில் உள்ள ஹோட்டலின் உட்புற முற்றத்தில் கீழே விழுந்ததில் உயிரற்ற நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கீழே விழுந்ததும், பொலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் பெய்னின் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்போது, இளம் பாடகர் லியம் பெய்ன் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது