மீண்டும் பாலியல் தொடர்பாக நீதி கேட்டு வரும் பாடகி சின்மயி
வட இந்தியாவில் 16 வயது இளம் பெண் ஒருவரை , கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து , மார்பு பகுதிகளை வெட்டி , தலையில் அடிக்கப்பட்டு, முகத்தில் ஆசிட் வீசி சிதைக்கப்பட்ட நிலையில் அந்த பெண் கொல்லப்பட்டார்.
தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக வலம் வருபவர் பாடகி சின்மயி. இவர் சமீபத்தில் திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பாடகி சின்மயி குரல் கொடுத்து வந்தார்.
சமூகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொடர்பான சம்பவங்களுக்கு அவர் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் தனது டிவிட்டரில் பாலியல் தொடர்பான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பொள்ளாச்சி சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பாடகி சின்மயி குரல் கொடுத்தார்.
தற்போது அண்மையில் வட இந்தியாவில் 16 வயது இளம் பெண் ஒருவரை , கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து , மார்பு பகுதிகளை வெட்டி , தலையில் அடிக்கப்பட்டு, முகத்தில் ஆசிட் வீசி சிதைக்கப்பட்ட நிலையில் அந்த பெண் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பாடகி சின்மயி குரல் கொடுத்து நீதி கேட்டு வருகிறார்.
Is anyone actually going to do anything to help prevent these crimes against women? pic.twitter.com/uydiIFDOgs
— Chinmayi Sripaada (@Chinmayi) April 1, 2019