சிங்கப்பூர் சலூன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

singapore saloon collection

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், லோகேஷ கனகராஜ், கிஷன் தாஸ், சத்யராஜ், ஷிவானி ராஜசேகர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

சிங்கப்பூர் சலூன்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியான 1 நாட்களில் உலகம் முழுவதும் 1 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி  நடிப்பில் வெளியாகி ஹிட்டான LKG படத்திற்கு இதைப்போல நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நல்ல ஓப்பனிங்கை கொடுத்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்