சியான் 60 படத்தில் இணைந்த சிம்ரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

@SimranbaggaOffc madam joins the Gang #Chiyaan60 ????

சியான் 60 படத்தில் நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டதாகவும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகையான சிம்ரன் இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் நடிகை சிம்ரன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
சியான் 60 படத்தில் இணைந்த சிம்ரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!