'உனக்கு லவ்லி மேன் ,எனக்கு லவ்லி இல்லையே' .! சிம்புவின் கியூட் ஒர்கவுட் வீடியோ.!

Simbu's cute workout video is going viral on social media.

சிம்புவின் கியூட்டான ஒர்கவுட் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு தனது “ஈஸ்வரன்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதன் பின் சிம்பு மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் நடிக்கவுள்ளார்.

சமீப காலமாக சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் சிம்பு வழக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது புகைப்படங்களையும், ஒர்கவுட் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் பயிற்சியாளருடன் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் வெயிட் தூக்கும் அவரை பார்த்து லவ்லி என்று கூற சிம்புவோ உனக்கு லவ்லி மேன் ,எனக்கு லவ்லி இல்லையே என்று கியூட்டான ரியாக்ஷனுடன் கூறுகிறார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node