சிம்புவின் "மாநாடு" டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்தில் உருவாகி வரும்  திரைப்படம் “மாநாடு”. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

unknown node

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலருக்காக ரசிர்கர்கள் காத்திருந்தார்கள்.

unknown node

ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் வகையில், மாநாடு படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

unknown node