சிம்புவின் பிறந்தநாள் பரிசு.!செம மிரட்டலாக வெளியான மாநாடு டீசர்.!

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் அவர் நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் சார்பாக மாநாடு டீசரை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர் .

எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டலான என்டரியும் , சிம்புவின் அசத்தலான நடிப்பில் வெளியான மாநாடு டீசரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில்சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் படத்திலிருந்து வெளியான பர்ஸ்ட் லுக் , செக்கன்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.