மாநாடு படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய சிம்பு..!!

Simbu said the conference film will be released in 2 or 3 more months.

மாநாடு திரைப்படம் இன்னும் 2 மாதங்கள் அல்லது 3 மாதங்களில் வெளியாகும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தாளராக நடிகர் சிம்பு பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவரிடம் மாநாடு படம் குறித்து விஜே ரக்ஷன் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சிம்பு மாநாடு திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும். விதியசமான கதைகொண்ட அரசியல் படமாக இருக்கும். என்றும் கூறினார். அதன்பிறகு படம் எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு ” இன்னும் 2 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் ஆகும். படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.