சிம்புவுக்கு விரைவில் டும்..டும்..டும்..! சந்தோஷ செய்தி சொன்ன தந்தை டி.ராஜேந்தர்...!

நடிகர் சிம்பு 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு நல்ல பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து

நடிகர் சிம்பு 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு நல்ல பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

unknown node

TRajendar [Image Source: Twitter ]

மேலும் இந்த கோவிலில், டி.ராஜேந்தர் தனது மகன் சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்யதாராம். அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை வலம் வந்து, கொடிமரம் அருகே விழுந்து மிகுந்து பயபக்தியுடன் தனது வேண்டுதலை கோரிக்கையாக வைத்தார்.

இதையும் படியுங்களேன்-பெரிய தொகை கொடுத்து “மாவீரன்” படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.!

unknown node

Str And Tr [Image Source: Twitter ]

பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். என்னிடம் பலர் என்னுடைய மகன் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளால் விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும்.

unknown node

Str [Image Source: Twitter ]

என் மகனுக்கு நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். என் மகனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு வேண்டுயுள்ளேன். விரைவில் சிம்புவுக்கு திருமணம் நடக்கும்” என கூறியுள்ளார்.  இதனை பார்த்த அவரது ரசிகர்கள் கடவுளின் அருளால் அவருக்கு நல்ல பொண்ணு கிடைக்கும் என வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

சிம்புவுக்கு விரைவில் டும்..டும்..டும்..! சந்தோஷ செய்தி சொன்ன தந்தை டி.ராஜேந்தர்...!