கெத்தாக பத்து தல படப்பிடிப்பிற்கு செல்லும் சிம்பு.?

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்து காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்து காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு அடுத்தாக பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக சிம்பு கெத்தான தோற்றத்தில் தாடி வளர்த்து வருகிறாராம். மேலும், வரும் மே 6-ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

படத்தில் சிம்பு டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். படத்தின் கதையை சிம்புவுக்கு ஏற்றது போல கதையை மாற்றி அமைத்துள்ளனர்.

unknown node

இந்த படத்தை நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை ஸ்டுடியோ ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.