பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார் சியான் விக்ரம்..!!

Actor Vikram donates Rs 30 lakh to Chief Minister's Corona General Relief Fund

முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலானது பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனோவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றார்கள் அந்த வகையில் நடிகர் விக்ரம்கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதியாக ரூ.30 லட்சத்தை தனது இணையதள வழியாக முதலமைச்சர் மு.க. ஸ்டான் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.