தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
unknown nodeஇந்த வெற்றியை தொடர்ந்து பூஜா ஹெக்டேக்கு தமிழில் பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதன் காரணமாக இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இப்போது இந்தியில் சல்மான் கானுடன் வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ் படத்திலும் நடிக்கிறார்.
unknown nodeஇதற்கிடையில், பூஜா ஹெக்டே இன்னும் அழகாக வேண்டும் என்று தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இன்னும் அழகாக திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக வெளிநாட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், இந்த தகவலை பார்த்த பூஜா மிகவும் ஷாக் ஆகிவிட்டாராம்.
இதையும் படியுங்களேன்-அந்த ரெண்டும் சூப்பர்…அதைவிட உங்க லுக்கு சூப்பரோ..சூப்பர்.. புகைப்படங்களை வெளியீட்டு சொக்க வைத்த தர்ஷா குப்தா.!
unknown nodeஇந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள பூஜா ஹெக்டே தரப்பு, அவருக்கு உடல்நலப் பிரச்சனை எதுவுமில்லை என்றும், எந்த விதமான அறுவைச் சிகிச்சையும் அவர் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.