வலிமை படத்திற்கு அஜித் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.?! வெளியான அதிர்ச்சி புகைபடங்கள்.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் குறிப்பிட்ட பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிகர் அஜித் நடிக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டதாக முன்னதாக தகவல்கள் வந்தது. குறிப்பாக மேக்கிங் வீடியோவில் அஜித் கீழே விழுந்து மீண்டும் பைக் எடுத்து ஸ்டண்ட் செய்வதுபோல காட்சியும் இருந்தது.

unknown node

ஆனால், அஜித்திற்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அதாவது படத்தில் முக்கியமான பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும்போது அஜித்திற்கு ரத்தம் சொட்ட சொட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் ஏற்படும்போது அஜித்திற்கு மருத்துவ உதவி செய்யும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் வலிமை படத்திற்காகவும், தன் ரசிகர்களுக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து நடித்திருப்பது அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் சில அஜித் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் இப்படிப்பட்ட மனிதரை எப்படித்தான் சிலருக்கு விமர்சிக்க மனம் வருகின்றதோ என கேட்டுவருகின்றனர்.

unknown node