#Shocking:பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா மரணம் – தற்கொலையா என போலீசார் சந்தேகம்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா,தனது பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தின் குளியலறையில் சனிக்கிழமை (ஜூன் 11)

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா,தனது பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தின் குளியலறையில் சனிக்கிழமை (ஜூன் 11) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

அவரது படுக்கையறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு பாட்டில் ஒன்று மீட்கப்பட்ட நிலையில்,பிரபல ஆடை வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.எனினும் சந்தேக மரணம் தொடர்பான விதிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாரா ஹில்ஸின் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும்,அவரது மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா பஞ்சாரா ஹில்ஸில் ஃபேஷன் ஸ்டுடியோவை நடத்தி வந்தார்.அவர் பல முன்னணி பாலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்களுடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.